welcome

வணக்கம்

 பிரதேச செயலகம் இப்பாகமுவ

எங்கள் பார்வை 

"திறமையான அரசாங்க சேவை மூலம் முன்னேற்றத்தை நோக்கி "

எங்கள் நோக்கம்

"அரசாங்கக் கொள்கைகளுக்கு இணங்க சேவைகள் வழங்குதல்,

வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் மக்களின் பங்கேற்புடன் ஒரு திறமையான,

நிலையான மற்றும் நன்கு திட்டமிட்ட அபிவிருத்தி செயல்முறை மூலம்

பிரதேசத்தின் கிராமப்புற வாழ்க்கை மேம்படுத்தல்"

அறிமுகம்: -

குருநாகல் மாவட்டத்தில் ஹிரியால வாக்காளர்  பிரிவிற்குற்பட்ட இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் நிலப் பரப்பு  207,55 சதுர கிலோமீட்டர்களாகும்.உள்ளக நிர்வாக வசதிக்காக இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவு74 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 203  கிராமங்ளைக் கொண்ட இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குள் பல புவியியல் அம்சங்கள் நிறைந்த வளமான பிரதேசமாகும்.

அந்நாளில் அரசருக்கு கொண்டு சென்ற பலாப்பழத்தை இடையில் “ வைத்த ஊர் “என்பது சிங்களத்தில் “திப்பகம” என்பது பிற்காலத்தில் “ இப்பாகமுவ ”என்று திரிபடைந்ததாக வரலாற்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இப்பாகமுவ, குருணாகலை – தம்புள்ள வீதியிலிருந்து தம்புள்ள பக்கமாக சுமார் 13 கி.மீ பயண தூரத்தில்

இருக்கும் “ பான்கொல்ல”  சந்தியிலிருந்து வலது புறமாக 200 மீற்றரில் ​அமைந்துள்ள “டெங்கோலந்த” வீதிக்கு அருகில் அமைந்துள்ள உப பாதையின் இடப்பக்க்கத்தில் முதலில் நிலம் இப்பாகமுவ பிரதேச  சபை

அமைந்திருப்பதுடன்  அதற்க்கு அடித்ததாக சுமார் 2  ஏக்கர் நிலப்பரப்பில் இப்பாகமுவ பிரதேச செயலகம் அமைந்துள்ளது.

திசை எல்லை

வடக்கு                      : பொல்பிதிகம மற்றும் கலீவெல பிரதேச செயலகப் பிரிவு

கிழக்கு                      : மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் ரிதீகம பிரதேச  செயலாளர் பிரிவு

தெற்கு                      : மாவதகம மற்றும் மல்லவபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள்

மேற்கு                      : தெதுரு ஓயா எல்லை மற்றும் கணேவத்த பிரதேச செயலகப் பிரிவு

இப்பாகமுவ பிரதேச செயலகப் பிரிவு

குருணாகலை நாலன்தா 1: 63360 வரைபடத்தில் வடக்கு  தெற்கு 160-170 பாகை மற்றும் கிழக்கு மேற்கு 260 - 270 பாகையில் அமைந்துள்ளது. தெற்கு எல்லையில் பெருக்கெடுத்தோடும் தெதுரு  ஓயாவும் வடமேல் பகுதியில் கிம்புலவானா ஓயாவும் வட எல்லையில் பதலகொட  வாவியும் காணப்படுகிறது.

 பின்வருமாறு 05 பிரதான சறுக்கு மண்டலங்கள் உள்ளன.

சாய்வு  0%  - 08%  அந்த பகுதியில் 17,763 ஹெக்டேர்

சாய்வு 08%  - 16% பி மண்டலம் 1,795 ஹெக்டேர்

சாய்வு 16%  - 30% சி பகுதி 1,052 ஹெக்டேர்

சாய்வு 30%  - 60% டி பகுதி 1.940 ஹெக்டேர்

சாய்வு 60%  - 70% ஈ பகுதி 626 ஹெக்டேர்

மண் மற்றும் நீர்: -

மண்: - பிரதேசத்தில் பொதுவாக காணப்படுவது மஞ்சள் நிற பழுப்பு நிற மண்ணாகும். ஆனாலும்மெல்சிரிபுற மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் சிவப்பு பழுப்பு மண் காணப்படுகின்றது. இந்த மண் மற்றும் கலவை மண்,களிமண் காணப்படுகின்றது.இந்த களிமண்ணை செங்கல், மட்பாண்டங்கள் மற்றும் ஓடு தொழிலில் பயன்படுத்த முடியும்.மேலதிகமாக, காரீயம் மற்றும் மைக்கா என்பன ராகெதரமற்றும் தல்கொடபிடிய பிரதேசங்களில் காணப்படுகின்றது.

நீர்: - நெல் மற்றும் முக்கிய விவசாயச் செயல்பாடுகளுக்காக நீர் வழங்கும் பாரிய நீர்த்தேக்கங்களான தெதுரு ஓயா வும் கிம்புல்வானா நீர்த்தேக்கம் மற்றும் அதற்கு நீர் வழங்கும் கிம்புல்வானா ஓயாவும் காணப்படுவதுடன்  நீர்த்தேக்கமான மெத்தகெடிய வாவியும் சிறிய நீர்த்தேக்கமாக குறிப்பிடப்படும் சிறிய பாசன தொட்டிகள்(சிறிய குளங்கள்)  254 உம் விவசாய கிணறுகள் 141 உம் இயற்கை நீர் ஊற்றுகள் 07 மூலமும் பிரதேசத்தின் நீர் தேவைபெருமளவில் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்த நீர் ஆதாரங்கள் அனைத்தும் பிரதேசத்தின் நீர் பாதுகாப்புக்கான பெரிய சேவையை செய்கின்றன.

வரலாற்று பின்னணி:

பண்டைய காலத்தில் நான்குஇராச்சியங்கள் காணப்பட்ட குருநாகல் மாவட்டத்தில் ஹிரியால வாக்காளர் பிரிவிற்கி உட்பட்ட  இப்பாகமுவ பிரதேச செயலகம் , மத்திய மாகாணத்திற்கு அடுத்த்தாக அமைந்துள்ளது.

 இப்பாகமுவ பிரதேச செயலகப் பிரிவில் வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்பு மிக்க பல காரணகளும், வரலாற்று  முக்கியம் வாய்ந்த விகாரைகள் மற்றும் பழமையான விகாரைகள், பண்டைய கல்வெட்டுகள் , தொல்பொருள் மதிப்பு மிக்க இடங்கள் மற்றும் பொருட்கள் பல காணப்படுகின்றன.

பிரதேச செயலகம் பிரிவில் வரலாற்று நீர்ப்பாச அமைந்துள்ள ன அமைப்புகளான தெற்கில் அமைந்துள்ள பதகொட வாவி மற்றும் இப்பாகமுவ பிரதேச செயலகம் பிரிவில் வடமேற்கில்  அமைந்துள்ள கிம்புல்வானா ஓயாவும் கண்ணியம் மற்றும் பெருமை மிக்கவைகளாகும்.

.மேற்கூறப்பட்ட பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்து  நீரைப் பெற்றுக்கொள்ளும் மற்றும் வானத்திலிருந்து பெறும் நீரை சேகரித்து விநியோகிக்கும்  254 சிறிய குளங்கள் (சிறிய குளங்கள் -17, அணைகள் - 177) மூலமும் பிரதேசம் வளமாக்கப்படுகின்றது.

மேலும் கபில நிற கலவை மண்,   பிரதேசம் முழுவதும் பரம்பியுள்ள ஈர மற்றும் உலர் காலநிலை மண்டலங்கள், ஆண்டு  முழுவதும் விவசாயத்திற்கு சாதகமான காலநிலையை உருவாக்கின்றது. பிரதேசம் முழுவதும் பரம்பியுள்ள கருங்கல் பாறைகள் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுவதுடன் முக்கியமாக ரகெதரவில் காணப்படிம் காரீயம் , அதுதொடர்பான தொழிற்சாலைகளிலும், சில பகுதிகளில் காணப்படும் களிமண் மண், செங்கல், ஓடுகள் மற்றும் மட்பாண்ட தொழிலுக்காக பயன் படுத்தப்படும்.

இப்பாகமுவ செயலகம் பிரிவு வரலாற்று முக்கியத்திவம் வாய்ந்த்துடன் மேலே குறிப்பிட்டுள்ள குருநாகல் மாவட்டத்தின் நான்கு பெரிய இராச்சியங்களுக்கு மேலதிகமாக “ புதலத்தலி” எனும் துணை இராச்சிமொன்று பதகொட வாவிக்கு அருகில் அமைந்துள்ளதாக வரலாறு சான்று பகிர்கிறது.

முந்தைய காலத்தில் பதலகொட பிரதேசம் ‘’மங்கலபுரய” என்றழைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ,அதனால் பதலகொட வாவியை அண்டிய பகுதிகள் வரலாற்று முக்கியத்திவம் வாய்ந்த்வையாக அமைந்துள்ளதன. பதலகொட வாவி முதலில் பராக்கிரம அரசனின்   அமைச்சராக கடமையாற்றிய புதலத்தலி என்பவரால்  கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த அமைச்சர் தெதுரு ஓயாவை மறித்து அணைக்கட்டை கட்டி அணையிலிருந்து தண்ணீரை பெற்றுக்கொண்டு பதலகொட வாவிக்கு நீர் நிரப்பியதாக வரலாறு கூறுகின்றது. அதனால் பின்னாளில் இந்த வாவி "புதலத்தவாபி" என்றும் வாவியை அண்டிய பிரதேசம்" புதலத்தலி " என்றும் கூறப்படுவதாக ஒரு கருத்து உள்ளது.

 எனினும், பின்னர் கல்யாணவதி ராணியின் மூலம்  (கி.பி. 1202-1208)பெற்றுக்கொண்டு பதலகொட வாவி சீர்திருத்தம் செய்யப்பட்டதாக  வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. பதலகொட வாவியின் மதகு தொட்டி அருகேயுள்ள கல்வெட்டின் மூலம் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கல்யாணவதி ராணியின் மூலம்  அனைவரும் தெரிந்தகொள்ளும் பொருட்டு  இந்த கல்வெட்டு  அமைக்கப் பட்டதாக  கூறப்படுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய வாவி/தொட்டி மற்றும் வரப்பு, தொட்டி மதகு அனைத்தும்அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த காலகட்டத்தின்  பிறகு,  பிரிட்டிஷ் (கி.பி.1894) பிரபல ஆங்கில பொறியாளர் ஹென்றி பார்க்கர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த சீர்திருத்தம் தொடர்பாக இப்பாகமுவ செயலகம் பிரிவின் இலக்கம் 515- பெரியகடுனெலவ கிராமசேவகர் பிரிவில்  காணப்படும் கல்லால் செய்யப்பட்ட வேலைப்பாடு சாட்சியாக அமைவதுடன் இது, திரு. பார்கர் அவர் களின் பொறியியல் அறிவு மற்றும் நிபுணத்துவம் சம்பந்தமாக சான்று பகிரும் அற்புதமான காட்சியாகும்.

மேலும், இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் இரண்டாம் பாரிய நீர்ப்பாசனத் திட்டமான கிம்புல்வானா ஓய நீர்ப்பாசனத் திட்டம் லேனவ மலைப்பிரதேசத்தின் துனுகல மற்றும் விகார கந்த கபொல்ல மூலம் பெருக்கெடுத்தோடும் கிம்புல்வானா ஓயாவுக்கு குறுக​கே  கி.பி. . 276-304  காலப்பகுதியில் மகாசேன மன்ன னினால்  உருவாக்கப்பட்ட பாரிய குளங்கள்  16 இல் ஒன்றெ ன மகா வம்சம் குறிப்பிடுகின்றது.

துடுகெமுனு மன்னர் கால சங்கமுவ  விகாரைவரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.தெற்காசியாவின் முதலாவது போர் ஒப்பந்தம் காணப்படுவதும்  இவ்விகாரையிலாகும். இவ்விகாரையானது கி.பி. . 1153-1186 காலப்பகுதியில் ஆட்சி செய்த பராக்கிரமபாகு மன்னர் மற்றும் இரண்டாம் கஜபாகு மன்னருக்கிடையில் இடம்பெற்ற போர் முடிவின்  பெறுபேரென்று கூறப்படுகிறது.இலங்கையின் கடைசி மலியதேவ ரஹதென் அவர்கள் இவ்விகாரையில் இருந்ததாகவும் கூறப்ப்படுகிறது.  இங்கு வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள் மற்றும் சத்திரவட்டக்கல் காணப்படுகிறது. அதனதல் அரசாங்கம் இவ்விகாரையை பண்டைய  பெருமை மிக்க எழுச்சியூட்டும் சின்னமாக பெயரிட்டுள்ளது.

பௌத்த வருடத்தின் (கி.பி.191) இரண்டாம் பெதீஷ் மன்னரின்போதிகுப்த எனும் இளவரசன் மயுராவதி இளவரசியை மணமுடித்து உதுருபவ்வ பூமியை அரச மாளிகையாக்கி சிறப்பாக ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது.பின்னர் அவ்விடத்தில்  கடவுள் வழிபாட்டிற்கான ஒரு இடமும் அங்கு காணப்படும் குகையில் ரியன் 18 உயரமான புத்த சிலையும் அமைக்கப் பட்டது.விகாரை நிலத்தின் வட பகுதியில்( “உதுர”) இக்குகை அமைந் திருப்பதால் விகாரை நிலமானது  “உதுருபவ்வ ‘” எனக் கூறப்படுகிறது.

மேலும், துட்டகை மன்ன்னால் அமைக்கப் பட்ட சுமார் இரண்டாயிரம் வருடம் பழமை வாய்ந்த  உஸ்ஸாவ ரஜமஹா விகாரையும் இப்பாகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு வரலாற்று சிறப்பை கொடுக்கும் இடமாக​ கருதப்படுகிறது . கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய   உஸ்ஸாவ  ஸ்ரீ நாகலென ​ராஜ மகா விகாரை  மெல்சிரிபுர மடஹபொல 4 ஆம் கி.மீ. கம்பத்துக்கு  அருகாமையில்  ஒரு அழகான சமவெளியில் கட்டப்பட்டுள்ள ஒரு பழமையான விகாரையாகும். இங்கு ஒரு நாகத்தின் சிலை காணப்படுவதால், ஸ்ரீ நாகலென ​ராஜ மகா விகாரை என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போய சீமாமாலக்கய , கல்வெட்டுகள், கல்லாலான கம்பம் மற்றும் சந்திர வட்டக்க்கல் போன்ற தொல்பொருள் இடிபாடுகள் உள்ளன.

தற்போது சீர்திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விகாரையில் ராஜயானத் வஹன்சே அனுராதபுர காலப்பகுதியில் ஆட்சி  செய்ததாகவும் 1727 ஆம் ஆண்டில் உஸ்ஸாவ ரஜமஹா விகாரை சிங்கள கடைசி அரசனான ஸ்ரீ விக்ரம இராஜசிங்க ஆட்சி காலப்பகுதியில் பிலிமதலவ்வே அதிகாரம்கே  முன்னிலையில் தளதா மாளிகையில் இருந்த மில்லவான குணரத்ன பிக்குவின் பெயரில் பூஜை செய்ததாகவும் மஹவெலபிடிய எனும் இடத்துக்கு எழுதப்பட்ட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகாரையில் உயரமான​ ஒரு சைத்திய காணப்படுவதால் சிங்களத்தில்  “ உச சேய ” என்பது உஸ்ஸாவ என திரிடைந்த்த்தாக கூறப்படுகிறது. இதனால் இக்கிராமமும் உஸ்ஸாவ எனப்பெயரிடப்பட்டுள்ளது.பேத்தவ  எனும் கிராமத்தில் காணப்படும் “சுழுகல் விகாரை” வரலாற்று மதிப்புமிக்க இடமாகும். இந்த கோவிலில் மாலியதேவா மகா தேரர் இருந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும்,பேத்தவயில் உள்ள சூலகலென் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் சூலக எனும் ஒரு அமைச்சர் இங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இபாகமுவவு பிரதேச செயலகத்தின் தொலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்கிரிமட ராஜ மகா விஹாரையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஆரம்பகால அநுராதபுரத்திற்குச் சொந்தமான இந்தக் கோயில் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த விகாரை புத்தாச மன்னனின் மைந்தனின் உபதிசா இளவரசனால் கட்டப்பட்டதா வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டி காலப் பகுதியில் ஓவியங்கள், சிலைகள், கல் விளக்கு இடுகைகள் மற்றும் உள்ளன. கூடுதலாக, அம்பன்பொல  பிரதேசத்தில் அமைந்துள்ள நாமல் அங்க ரஜ மஹா விகாரை வரலாற்று முக்கியமான இடமாகும். கென்தவல ஸ்ரீ விஷ்ணு தேவாலயம் மற்றும் கிரின்திகல்ல கென்தவல ஸ்ரீ விஷ்ணு தேவாலயம் என்பன தொல்லியல் மதிப்பு இடங்களாகும்.

 இந்த விகாரைகள், குளங்களுக்கு  மேலதிகமாக, , பிரதேசத்தில் பல புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் உள்ளன. இப்பாகமுவ மத்திய மத்திய கல்லூரி அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரை உருவாக்கிய பாடசாலையாகும். இலவச கல்வியின் தந்தையான திரு. கண்ணங்கரா அவர்களின் வழிகாட்டலில் உருவான மத்திய கல்லூரிகளில் மூன்றாவது மத்திய கல்லூரி இப்பாகமுவ மத்திய மத்திய கல்லூரியாகும்.

1942 பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை , 2012 ஆம் ஆண்டில் 70 ஆண்டுகள் நிறைவு   பெற்றது.

அத்துடன் மாணவர்களின் அறிவு, பழக்க நடவடிக்கை திறமைகளை ஒரு 1944-ல், 23 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் இருந்த  இப்பாடசாலையில் தற்போது 147 ஆசிரியர்களும் 2,911 மாணவர்களும் உள்ளனர்.

கல்வியிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கும்  இப்பாகமுவ மத்திய மத்திய கல்லூரி, குருநாகலை மற்றும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் கல்வி நிறுவனமாகும்.

பதலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம், இப்பாகமுவ பிரதேசத்திற்கு உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். 1952 இல் ஆரம்பிக்கப்பட்ட  இந்நிறுவனம், நெல் மற்றும் பல விதமான ஆராய்ச்சிளை மேற்கொள்வதுடன் இதற்காக இரண்டு பருவங்களிலும் பயிர் செய்கைக்காக  தொடர்ச்சியான நீர் வழங்கல் பதலகொட நீர்த்தேக்கத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

 தாவரக் கன்று ஆராய்ச்சி, மண் ஆராய்ச்சி, விதை நெல் உற்பத்தி , சமூகப் பொருளாதார திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயற்படுத்தல் மற்றும்  பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விவசாய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பயிற்றுவித்தல் ஆகியவற்றைமேற்கொள்ளும் இந்நிறுவனம், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்தவத்தை பெற்றுள்ளது.

இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவு  மத, கலாச்சார, தொல்பொருள், சமூக, கல்வி, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்  என்ற வகையில் ஹிரியால , குருநாகலை மற்றும் முழு நாட்டிற்கும் மிக மதிப்புமிக்க இடமாகும். அது மட்டுமின்றி  இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவு  உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
ஆக2025
இப்பாகமுவ பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி -2025

இப்பாகமுவ பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி -2025

குருநாகல் மாவட்ட அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களுக்கு...

21
ஜூலை2025
மொபைல் சேவை திட்டம் -2025.06.24

மொபைல் சேவை திட்டம் -2025.06.24

பேத்தவ,மஹமூகலன்யாய,போகமுவ செல்லும் வசம் செக்ரெக்டராஷி செய்து, மாகாணத்துமியாவின் அறிவுரைகள்,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top